தினசரி காலெண்டர் மீண்டுமொருமுறை இன்று பாரதியை நினைவூட்டியது. மானுடம் பாட வந்த கவி இம்மண்ணை விட்டுச்சென்று இன்றுடன் 91 ஆண்டுகள் ஆயின. 9/11 ஐ அழிவுநாளாக அனுசரிக்கிறது இவ்வுலகம். நானும் அழிவுநாளாகவே கருதுகிறேன் - ஆளுமையின், ஆண்மையின், வீரத்தின், காதலின் அழிவுநாளாக!.
அவன் நினைவுநாளில் அவன் எழுத்துக்களில் சிலவற்றை நினைவுகூறுவோமா?
ஆயுதம் செய்வோமென்றான் - செய்தோம், அழிவின் கருவியாகப்பயன்
படுத்த!
ஆலைகள் செய்வோமென்றான் - செய்தோம், அனால் இயக்க
மின்சாரமில்லை, உற்பத்தி செய்யவும் விடுவதில்லை !
ஓயுதல் செய்யோமென்றான் - ஒப்புககொண்டார்கள் அரசியல்வாதிகள்,
ஓய்வில்லாமல் பொருள் சேர்த்தார்கள்!
உண்மைகள் சொல்வோமென்றான் - அதை மட்டும் choice ல் விட்டோம்!
ஆதலினால் காதல் செய் என்றான்-அக்கலையும் செவ்வனே கற்கவில்லை -
காமத்தைக்காதலென்றோம், கிட்டவில்லைஎன்றால் கொலையும்
செய்தோம் !
நல்லதோர் வீணை செய்தோம் அதை நலம் கெடப்புழுதியில் எறிந்தும் விட்டோம்
வல்லமையிருந்தும் இந்த மாநிலம் பயனுற வாழ மறுத்திட்டோம்
சென்றுவா, பாரதி, செப்டம்பர் 11 மீண்டும் வரும்,
அன்று மீண்டும் நினைவு கொள்வோம், அந்நாளே மறந்தும் போவோம்!.
No comments:
Post a Comment