Tuesday, September 11, 2012

Indru pudhidhaippirandhai, engal Bharathi!

தினசரி காலெண்டர் மீண்டுமொருமுறை இன்று பாரதியை நினைவூட்டியது.  மானுடம்  பாட வந்த கவி இம்மண்ணை விட்டுச்சென்று இன்றுடன்  91 ஆண்டுகள் ஆயின.  9/11 ஐ அழிவுநாளாக  அனுசரிக்கிறது  இவ்வுலகம்.  நானும் அழிவுநாளாகவே கருதுகிறேன் - ஆளுமையின், ஆண்மையின், வீரத்தின், காதலின் அழிவுநாளாக!.

அவன் நினைவுநாளில் அவன் எழுத்துக்களில் சிலவற்றை நினைவுகூறுவோமா?

ஆயுதம் செய்வோமென்றான்  - செய்தோம், அழிவின் கருவியாகப்பயன் 
                                                                 படுத்த!
ஆலைகள் செய்வோமென்றான்  - செய்தோம், அனால் இயக்க
                                                   மின்சாரமில்லை, உற்பத்தி செய்யவும் விடுவதில்லை !
ஓயுதல் செய்யோமென்றான் - ஒப்புககொண்டார்கள் அரசியல்வாதிகள்,
                                                           ஓய்வில்லாமல் பொருள் சேர்த்தார்கள்!
உண்மைகள் சொல்வோமென்றான்  - அதை மட்டும் choice ல் விட்டோம்!

ஆதலினால் காதல் செய் என்றான்-அக்கலையும்  செவ்வனே கற்கவில்லை -
            காமத்தைக்காதலென்றோம், கிட்டவில்லைஎன்றால்  கொலையும்
            செய்தோம் !

நல்லதோர் வீணை செய்தோம்  அதை நலம் கெடப்புழுதியில்  எறிந்தும்  விட்டோம் 
வல்லமையிருந்தும் இந்த மாநிலம் பயனுற வாழ  மறுத்திட்டோம்

சென்றுவா,  பாரதி, செப்டம்பர் 11 மீண்டும் வரும், 
அன்று மீண்டும் நினைவு கொள்வோம்,  அந்நாளே மறந்தும் போவோம்!.